ஜெயில் விமர்சனம்

0
175

ஜெயில் விமர்சனம்

கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியாதாசன் தயாரிப்பில் இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ஜெயில்.
இதில் ஜி வி பிரகாஷ் குமார்,நடிகை அபர்னதி, ராதிகா சரத்குமார்,பசங்க பாண்டி, நந்தன் ராம், ரவி மரியா, ஜெனிபர், சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-கணேஷ் சந்திரா, இசை-ஜீ வி பிரகாஷ் குமார், கதை -இயக்குநர் வசந்தபாலன்,எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், வசனம்- பாக்கியம் சங்கர், எடிட்டிங்-ரேய்மெண்ட் டெரிக், சண்டை-அன்பறிவு, நடனம்-சாண்டி, ராதிகா,பாடல்கள்-கபிலன், சினேகன், தெருகுரல், கருணாகரன், பிஆர்ஒ-யுவராஜ்.

ஜீ.வி.பிரகாஷ்;குமார், பாண்டி, நந்தன் ராம் ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். அனைவருமே காவேரி நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள். இதில் நந்தன் ராம் கஞ்சா விற்பவர். பாண்டி சீர் திருத்தப் பள்ளியிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தவர். ஜீ.வி பிரகாஷ்குமார் சிறு திருட்டுக்களை செய்து சம்பாதிப்பவர்.இதில் பாண்டி பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்கிறார்.போலீஸ் அதிகாரி ரவி மாரியா கஞ்சா கடத்தும் வேலையை கொடுக்க அதை செய்து விட்டு நந்தன் ராம் ஏமாற்றி விடுகிறார்.இதனால் ஆத்திரமடையும் போலீஸ் அதிகாரி ரவிமரியா நந்தன் ராமை போதைக் கும்பல் கோஷ்டி மோதலில் சிக்கவிட்டு கொன்று விடுகிறார்.அதன் பின் கஞ்சாவை நந்தன் ராம் ஒளித்து வைத்திருக்கும் இடத்தை அறிய முற்படுகிறார். இந்த தேடுதல் சண்டையில் பாண்டி சிறை செல்ல நேரிடுகிறது. இதனால் நண்பர்களின் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஜீ.வி.பிகாஷ் ஏற்றுக் கொள்கிறார். இதற்கெல்லாம் காரணம் யார் என்பதை அறிய ஜீ.வி.பிரகாஷ்குமார் முற்படுகிறார்? இறுதியில் நண்பரை மீட்டரா? இவர்களின் கதி என்னானது? என்பதே மீதிக்கதை.

ஜீ.வி.பிராகாஷ்குமார் கர்ணாவாக வட சென்னை பாஷையில் அசல் சேரிப்பையனாக வாழ்ந்து நட்பு, காதல், கோபம், பழி வாங்குதல் என்று நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி அசத்திவிடுகிறார்.

இவருக்கு போட்டியாக சேரி பாஷை பேசி நடித்திருக்கும் அபர்ணதி  இயல்பாகவும், அசால்டாகவும் தைரியம் நிறைந்த பெண்ணாகவும் காட்சிப்படுத்திருக்கும் விதம் அற்புதம்.

ஜி.வி.பிரகாஷின் நண்பர்களாக நடித்துள்ள நந்தன் ராம் மற்றும் பசங்க பாண்டி இருவரும் சிறந்த பங்;களிப்பு கதையின்  ஒட்டத்திற்கு அச்சாணி.

ராதிகாவிற்கு பெரிதாக காட்சிகள் இல்லாமல் வந்து போகிறார். ஜெனிபர், சரண்யா ரவிச்சந்திரன் சிறு கதாபாத்திரத்திலும் மற்றும் போலீஸ் அதிகாரியாக வரும் ரவிமரியா அதிரடி போலீசாக வந்து வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள், அவற்றில் வசிக்கும் மக்களின் அவலங்களை, வாழ்வியலையும், கஞ்சா கடத்தலையும், சண்டைக்காட்சிகளையும் சிறப்பாக காட்சிக்கோணங்களில் கொடுத்து ஆச்சர்யபடுத்திவிடுகிறார் ஒளிப்பதிவாளர் கணேஷ்சந்திரா.

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையில் கேட்கும்படி இருந்தாலும், அனைத்துப் பாடல்கள் சில இடங்களில் வேகதடைகற்களாக இருக்கிறது.. அன்பறிவின் சண்டைக் காட்சிகள் நேர்த்தியாக உள்ளது.

காவேரி நகர் உருவானதன் நோக்கத்தை முதல் காட்சியில் சொல்லியிருப்பதற்கும், அதன் பின் கதைக்களம் மூன்று நண்பர்களைச் சுற்றியே பயணித்திருப்பதும் பெரும் வித்தியாசம் உள்ளது. அங்கு வசிக்கும் மக்களின் அவலங்கள் மாறுவதற்கு எந்த ஒரு முயற்சியும் கதைக்களத்தில் காட்டாதது தான் குறையாக உள்ளது. நண்பர்களின் வாழ்க்கை, செண்டிமெண்ட், காதல், பாசம், போதைக் கும்பல் மோதல் என்று செல்லும் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் தான் நண்பர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்கள், அதற்கான தீர்வை கண்டுபிடிப்பதிலும், போலீசை மாட்டி விடுவதிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன். காவேரி நகருக்கு குடியமற வந்து கொண்டேயிருக்கும் மக்களின் அவலநிலையை சொல்லியிருப்பதிலும், அதை காட்சிப்படுத்தியவிதத்திலும் தன் அயராத உழைப்பை கொடுத்திருத்திருக்கும் வசந்தபாலனின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியாதாசன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ஜெயில் போதைக் கடத்தல் விவகாரத்தில் ஆடு புலி ஆட்டத்தில் ஜெயித்து வரும்.