ஜார்ஜியாவில் படக்குழுவினருக்கு கொரோனா…! அதிர்ச்சியில் ‘தளபதி 65’ படக்குழுவினர்!!

0
206

ஜார்ஜியாவில் படக்குழுவினருக்கு கொரோனா…! அதிர்ச்சியில் ‘தளபதி 65’ படக்குழுவினர்!!

ஜார்ஜியா நாட்டில் நடந்து வரும் ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பில் இருவரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியா நாட்டில் நடந்து வருகிறது.

ஜார்ஜியாவில் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். ஏப்ரல் 9-ம் தேதி ஜார்ஜியா சென்ற படக்குழு தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனராம்.

படப்பிடிப்பிற்காக 100 பேர் வரை ஜார்ஜியா சென்றுள்ளனராம். அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட பின்னரே அங்கு சென்றுள்ளனராம். ஜார்ஜியாவிலும் கொரோனா பரிசோதனை செய்து, பாதிப்பு இல்லை என்றதும் தான் படப்பிடிப்பு நடத்தத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் தற்போது படக்குழுவினர் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளரனாம். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் கூடுதல் பாதுகாப்புடன் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்துவிட்டு விரைவில் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.