ஜாங்கோ விமர்சனம்: நேர வளையத்திற்குள் மாட்டிக் கொண்டு தப்பிக்க நினைக்கும் ஒரு மருத்துவரின் கதறல்

0
75

ஜாங்கோ விமர்சனம்: நேர வளையத்திற்குள் மாட்டிக் கொண்டு தப்பிக்க நினைக்கும் ஒரு மருத்துவரின் கதறல்

சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மனோ கார்த்திகேயன்.
இந்த படத்தில் அறிமுக நடிகர் சதீஷ்குமார் மற்றும் டிக்டாக் புகழ் மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அனிதா சம்பத், ஹரீஷ் பேரடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் டேனியல் அன் போப் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு -கார்த்திக் கே தில்லை, இசை- ஜிப்ரான், படத்தொகுப்பு- சான் லோகேஷ், மக்கள் தொடர்பு- நிகில்.

பிரபலமான நரம்பியல் நிபுணர் சதீஷ்குமார் தன் காதல் மனைவி மிருணாளினியை பிரிந்து வாழ்கிறார். இருந்தாலும் ஒன்று சேர முயற்சிகள் செய்கிறார். இதனிடையே விண்கல் ஒன்று பூமியை நோக்கி வர, அந்த இடத்தில் மாட்டிக் கொள்ளும் சதீஷ்குமார் டைம் லூப்பில் அதாவது நேர வளையத்தில் மாட்டிக் கொள்கிறார். அது முதல் குறிப்பிட்ட நாள் முழுவதும் ஏழு மணியிலிருந்து தொடங்கி மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. அந்த வளையத்திற்குள் சிக்கிய பிறகுஅந்த நாளில் தன் மனைவியை யாரோ துப்பாக்கியால் சுட்டு கொல்வது போல் இருக்க, மனைவியை மீட்க நேர வளையத்தை பயன்படுத்தி காப்பாற்ற நினைக்கிறார். சதீஷ்குமாரால் மனைவியை மீட்க முடிந்ததா? யார் மனைவியை கொலை செய்ய துணிகிறார்கள்? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் முடிவு.

சதீஷ்குமார் புதுமுகமாக அறிமுகம் என்றாலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மிருணாளிணி ரவி தொலைக்காட்சி நிருபராக வந்து படம் முழுவதும் அவரைச் சுற்றியே நடப்பதால் முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரத்தை தன் நடிப்பால் திறம்பட கையாண்டிருக்கிறார்.

அனிதா சம்பத், ஹரீஷ் பேரடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் டேனியல் அன் போப் மற்றும் பலர் படத்திற்கேற்ற கதாபாத்திரங்களில் ஜொலிக்கிறார்கள்.

கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் படத்தின் வேகத்தை கூட்டி பலம் சேர்கின்றனர்.

சான் லோகேஷ் படத்தொகுப்பு கச்சிதம்.

முதன் முறையாக டைம் லூப் திரைப்படத்தை கொடுத்திருக்கும் இயக்குனர் மனோ கார்த்திகேயன் அதில் விண்கல் போன்ற அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியையும், செயற்கை இதயம் போன்ற மருத்துவபூர்வமான ஆராய்ச்சியையும் கையிலெடுத்து இரண்டையும் இணைத்து காதல் செண்டிமெண்ட் கலந்து திறம்பட கொடுத்து தன்னால் முடிந்த வரை வித்தியாசத்தை காட்ட நினைத்திருப்பதற்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து வெளி வந்திருக்கும் ஜாங்கோ நேர வளையத்திற்குள் மாட்டிக் கொண்டு தப்பிக்க நினைக்கும் ஒரு மருத்துவரின் கதறல்.