ஜவான் படத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்
புயல் வரும் முன் வரும் இடி அவள்! – ஜவான் நாயகி நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்டார் ஷாருக்கான்.
ஜவான் புதிய போஸ்டர்! வசீகரிக்கும் ஆற்றல் நிறைந்த அதிரடி அவதாரத்தில் நயன்தாராவை காண தயாராகுங்கள்!
ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘ஜவான்’, அதன் வளர்ந்து வரும் பிரபலத்துடன் தொடர்ந்து பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது.
ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி: நயன்தாராவின் கடுமையான மற்றும் அதிரடியான அவதாரத்தைக் காண்பிக்கும் அட்டகாசமான புதிய போஸ்டர், தி ஃபிமேல் லீட், சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.
“ஜவான்” முன்னோட்டத்தில் நயன்தாராவின் தோற்றம் அவரின் பாத்திரம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது. இந்த போஸ்டர் அதன் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முதன்முறையாக திரைக்கு வருவதால் இது மிகவும் சுவாரசியமான ஒரு கூட்டணியாக இருக்கும்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜவானின் ஒரு பகுதியாக இருப்பதைப் பார்ப்பது ஏற்கனவே இந்த உயர்-ஆக்டேன் அதிரடி பொழுதுபோக்கு படம் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. இப்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டர், சந்தேகமே இல்லாமல், நயன்தாரா போலீஸ் வேடத்தில் நடிப்பதை உறுதி செய்து அவரின் நடிப்பு இப்படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
படத்திலிருந்து சுவாரஸ்யமான புதுப்பிப்புகளைக் கொண்டு வருவதன் மூலம் பார்வையாளர்களின் உற்சாகத்தை விளிம்பில் வைத்திருக்க தயாரிப்பாளர்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிடவில்லை என்று தெரிகிறது.
ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கும் ஜவான் படத்தை, அட்லீ இயக்கியுள்ளார், கௌரி கான் தயாரித்துள்ளார். மேலும், கௌரவ் வர்மா இணைந்து தயாரித்துள்ளார்.
இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 7, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
She is the thunder that comes before the storm! #Nayanthara#JawanPrevue Out Now! #Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/STn6a20kka
— Shah Rukh Khan (@iamsrk) July 17, 2023
https://www.instagram.com/p/CuyrPG3Pdav/?igshid=Y2IzZGU1MTFhOQ==