சேகர் கம்முலா இயக்கத்தில் 51-வது படத்துக்கு தயாராகும் தனுஷ்
நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் டிச.15-ம் தேதி வெளியாகிறது.
இதில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்து, இப்போது தனது 50-வது படத்தை இயக்கி நடிக்கிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷண், அபர்ணா பாலமுரளி உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதையடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் தனுஷ். அவரின் 51-வது படமான இதில், ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா பெயர் அடிபடுகிறது. அதிரடி சண்டை கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது. பான் இந்தியா படமாக எடுக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.