செல்வராகவன் வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்ப்ரைஸ் விசிட்!
வைரலாகும் க்ரூப் போட்டோ!!
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் ரிலீசான திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மித்ரன் ஆர் ஜவகர் இயக்கிய இப்படத்தில் நடிகர் தனுஷ் உணவு டெலிவரி செய்பவராக நடித்திருந்தார். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. அதேபோல் இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் நானே வருவேன். இப்படத்தை தனுஷின் அண்ணனும், பிரபல இயக்குனருமான செல்வராகவன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை கலைத்துறையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான V கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
வித்தியாசமான சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படமாக இந்த படம் உருவாகி உள்ளது என்றும் நிச்சயம் செல்வராகவனுக்கு ஒரு சரியான ரீ-என்ட்ரி படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நானே வருவேன் வரும் வியாழக்கிழமை செப்டம்பர் 29ம் தேதி ரிலீஸ் ரிலீசுக்காக காத்திருக்கும் இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார் மு.க. ஸ்டாலின்.
இது நானே வருவேன் படத்தை முன்னிட்ட சந்திப்பு இல்லை என்றும் நட்பு ரீதியான சந்திப்பு தான் இது எனக் கூறப்படுகிறது. இயக்குநர் செல்வராகவன், அவர் மனைவி கீதாஞ்சலி மற்றும் அவரது குடும்பத்தினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த க்ரூப் போட்டோ அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
நானே வருவேன் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இயக்குநர் செல்வராகவன் குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் எடுத்துக் கொண்ட க்ரூப் போட்டோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நடிகர்கள்
தனுஷ் K ராஜா
இந்துஜா
எல்லி அவரம்
‘இளைய திலகம்’ பிரபு
யோகி பாபு
ஹியா தவே
பிரணவ்
பிரபவ்
ஃபிராங்க்கிங்ஸ்டன்
சில்வென்ஸ்டன்
துளசி
சரவண சுப்பையா
ஷெல்லி N குமார்
மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் K செல்வராகவன்
தொழில்நுட்ப குழுவினர்
இயக்குனர் : K செல்வராகவன்
தயாரிப்பு : கலைப்புலி S தாணு
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : ஓம் பிரகாஷ்
படத் தொகுப்பு : புவன் சீனிவாசன்
தயாரிப்பு வடிவமைப்பு : R K விஜய முருகன்
நடனம் : கல்யாண் மாஸ்டர், சதீஷ் மாஸ்டர்
சண்டைக் காட்சி : திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சிவா
தயாரிப்பு நிர்வாகி : வெங்கடேசன்
ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் : இலன் குமரன்
ஆடை வடிவமைப்பு: காவியா ஸ்ரீ ராம்
DI : நாக் ஸ்டூடியோஸ்
கலரிஸ்ட்: பிரசாந்த் சோமசேகர்
பாடல்கள் : யுகபாரதி, மதன் கார்க்கி, செல்வராகவன், தனுஷ்
ஸ்டில்ஸ் : தேனி முருகன்
When honourable C.M visited our family 😍😍 what a special meeting 🙏🏼🙏🏼 pic.twitter.com/kuLKoLD7k8
— selvaraghavan (@selvaraghavan) September 26, 2022