சென்னை திரும்பினார் ரஜினி : விரைவில் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்!

0
184

சென்னை திரும்பினார் ரஜினி : விரைவில் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்!

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னை திரும்பினார். விரைவில் அவர் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

ரஜினி அமெரிக்கா பயணம்

டப்பிங் பேசி முடித்த பின் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ‘அண்ணாத்த’ படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.