சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவராக கே.ராஜன் தேர்வு
திரைப்படத்துறையில் மிகவும் முக்கியமாக அங்கம் வகிப்பது திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் . அதிலும் முக்கியமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கம். மிகவும் முக்கியமான திரைப்படம் வெளியிடுவதில் ஒரு பிரச்சினை என்றால் அதை முதலில் தீர்த்து வைப்பது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் மட்டுமே.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தேர்தல் சென்னையில் 19-06-2022 அன்று நடந்தது.
இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், 16 செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைப்பெற்றது.
இந்த நிலையில் கே ராஜன் தலைமையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் நலன் காக்கும் அணி என்ற பெயரில் தலைவராக கே ராஜன், செயலாளர் காளியப்பன், பொருளாளர் பி.முரளி, துணைத்தலைவர் நந்தகோபால், துணைச்செயலாளர் சாய்பாபா, மற்றும் 16 கமிட்டி உறுப்பினர்கள் இந்த அணியில் வேட்பாளராக போட்டியிட்டனர்.
ஜனநாயக முற்போக்கு அணி தலைவராக திருவேங்கடம், செயலாளராக ஸ்ரீராம், பொருளாளராக சஞ்சய் லால்வானி, உப தலைவருக்கு கே.ராஜகோபால் என்ற ஆனந்தன், இணைச் செயலாளர் டி .ராஜகோபால், மற்றும் 16 கமிட்டி உறுப்பினர்கள் இந்த அணியில் வேட்பாளராக போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் வாக்களிக்க உரிமை உள்ள 469 பேரில் 359 பேர் ஓட்டு போட்டனர். இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.ராஜன் வெற்றி பெற்றார். அவரது தலைமையில் போட்டியிட்ட நிர்வாகிகள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
கே.ராஜன் 230 ஓட்டுகள் பெற்று தலைவராக தேர்வாகி உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திருவேங்கடம் 124 ஓட்டுகள் பெற்றார். செயலாளராக கே.காளையப்பன் (186 ஓட்டுகள்), துணைத் தலைவராக எஸ்.நந்தகோபால் (196 ஓட்டுகள்), பொருளாளராக பி.முரளி (176 ஓட்டுகள்), இணைச் செயலாளராக சாய் என்கிற சாய்பாபா (199 ஓட்டுகள்) ஆகியோர் தேர்வானார்கள்.
செயற்குழு உறுப்பினர்களாக மெட்ரோ ஜெயகுமார் (263 ஓட்டுகள்), கிருஷ்ணன் (239 ஓட்டுகள்), சந்திரன் (210 ஓட்டுகள்), பிரபு@ராம்பிரசாத் (208 ஓட்டுகள்), தியாகு (196 ஓட்டுகள்), பன்னீர்செல்வம் (192 ஓட்டுகள்), மனோகர் (a182 ஓட்டுகள்), சொக்கலிங்கம் (182 ஓட்டுகள்), ஆனந்தன் (180 ஓட்டுகள்), சுதாகர் (173 ஓட்டுகள்), கிருஷ்ணமூர்த்தி (172 ஓட்டுகள்), ராஜா ரகீம் (169 ஓட்டுகள்), குரோம்பேட்டை பாபு (164 ஓட்டுகள்), ஏ.ஜி. ரகுபதி (163 ஓட்டுகள்), கருணாகரன் (162 ஓட்டுகள்), நானி செல்வம் (161 ஓட்டுகள்) ஆகியோர் வெற்றி வாகை சூடினர்.