சென்னை சூப்பர் கிங்ஸ் விசில் போடு டீம் விஜய் ஆண்டனியின் ஆன்டி பிகிலி பாடலுக்கு வாழ்த்து தெரிவித்து  வரவேற்றது வைரலாகியுள்ளது

0
137

சென்னை சூப்பர் கிங்ஸ் விசில் போடு டீம் விஜய் ஆண்டனியின் ஆன்டி பிகிலி பாடலுக்கு வாழ்த்து தெரிவித்து  வரவேற்றது வைரலாகியுள்ளது

பன்முக திறமைகளுக்கு  சொந்தக்காரரான விஜய் ஆண்டனி ‘ஓவர்நைட் சார்ட்பஸ்டர்’ கொடுப்பவர் என்று இசை ஆர்வலர்களால் பாராட்டப்படுபவர். அவரது  இசை எப்போதும் புதியதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். அடுத்து வரவிருக்கும் தனது படமான ‘ஆன்டி பிகிலி – பிச்சைக்காரன் 2’ படத்திற்காக  அற்புதமான பெப்பி நம்பராக ‘ஆன்டி பிகிலி’ பாடலை கொடுத்திருப்பதன் மூலம் மீண்டும் தன்னுடைய இசை சிம்மாசனத்திற்கு திரும்பியுள்ளார். குறிப்பாக லூப் மோடில் பாடலை ரசிக்கும் இளைஞர்கள் மத்தியில் இந்தப் பாடல் ஓவர்நைட் ஹிட் ஆகியுள்ளது. வெளிவராத ஒரு படத்தின் பாடலுக்கு பார்வையாளர்களிடமிருந்து இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பது மிகவும் அரிதான நிகழ்வு. இந்த பாடல் தமிழக இளைஞர்கள் மற்றும் நாட்டின் பிற பகுதி இளைஞர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐபிஎல் போட்டியின் போது ‘விசில் போடு சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்’ இந்த பாடலை வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தது இந்த பாடலுக்கு மேலும் புகழ் வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது.

விஜய் ஆண்டனியின் ‘ஆன்டி பிகிலி – பிச்சைக்காரன் 2’ தனது புதிய விளம்பர யுக்திகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஸ்னீக் பீக் வெளியிட்டதில் இருந்து (படத்தின் ஹீரோ இல்லாமல் ட்ரைய்லர் மற்றும் டீசர் வெளியாவதற்கு முன்பே ஸ்னீக் பீக் வெளியிட்ட முதல் இந்தியத் திரைப்படம்) படம் வெளியாவதற்கு முன்பே சார்ட்பஸ்டர் டிராக் ஹிட் ஆகியது என படம் பார்வையாளர்கள் மத்தியில் சரியான கவனம் பெற்று வருவதை படக்குழு உறுதி செய்துள்ளது.

‘ஆன்டி பிகிலி – பிச்சைக்காரன் 2’ படத்தில் விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜி மகேந்திரன், மன்சூர் அலி கான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘ஆன்டி பிகிலி – பிச்சைக்காரன் 2’ படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.

தொழில்நுட்ப குழு

லைன் புரொடியூசர்: சாண்ட்ரா ஜான்சன்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: நவீன் குமார்,
தயாரிப்பு மேலாளர்: கிருஷ்ணபிரபு,
இயக்குநர்: விஜய் ஆண்டனி,
ஒளிப்பதிவாளர்: ஓம் நாராயணன்,
இசை: விஜய் ஆண்டனி,
DI கலரிஸ்ட்: கௌஷிக் கே.எஸ்,
எடிட்டர்: விஜய் ஆண்டனி,
அசோசியேட் எடிட்டர்: திவாகர் டென்னிஸ்,
கலை இயக்குநர் : ஆறுசாமி,
ஒப்பனையாளர்: ஜி அனுஷா மீனாட்சி,
சண்டைப் பயிற்சி: ராஜசேகர், மகேஷ் மேத்யூ,
ரைட்டர்ஸ்: விஜய் ஆண்டனி, கே பழனி, பால் ஆண்டனி