சூர்யா ரசிகாஸ்… இதோ எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி
கிராமப்புற பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இதில் சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ட்ரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது.
சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட படம். படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் 10-ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தை, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தற்போது படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரெய்லர் மார்ச் 2-ஆம் தேதி காலை 11 மணிக்கு யூ-ட்யூபில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். சூர்யா, சத்யராஜ் மற்றும் சரண்யா பொன்வண்ணன் இடம்பெறும் வீடியோவுடன் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.