‘சுல்தான்’ படத்தின் 90% பணிகள் முடிந்துவிட்டன… தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல்

0
309

‘சுல்தான்’ படத்தின் 90% பணிகள் முடிந்துவிட்டன… தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல்

கைதி, தம்பி படங்களை அடுத்து ‘ரெமோ’ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘சுல்தான்’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பொன்னம்பலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படம் குறித்து ட்வீட் செய்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “சுல்தான் படத்தின் 90% படப்பிடிப்பு பணிகள் மற்றும் எடிட்டிங் பணிகள் முடிந்துவிட்டன. மீதமிருக்கும் வேலைகள் கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் துவங்கும். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பெரிய பட்ஜெட் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும். இன்னும் ரிலீஸ் குறித்து எந்த திட்டமும் முடிவு செய்யப்பட வில்லை” என்று கூறியுள்ளார்.

படம் குறித்த தயாரிப்பாளரின் இந்த ட்வீட் சில ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்தாலும், ஒரு டைட்டில் லுக்காவது வெளியிடலாமே என்று தங்களது ஆதங்கத்தையும் ரசிகர்கள் பதிவு செய்துள்ளார்கள். ஆனால் இன்னும் 10% பணிகள் முடிவடைந்தால் மட்டுமே ரசிகர்கள் எதிர்பார்க்கும் அப்டேட்டுகள் கிடைக்கும் என தெரிகிறது.

‘சுல்தான்’ படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கார்த்தி நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.