சுமைகளை தூக்கிக்கொண்டு மலைப்பகுதிகளில் படக்குழுவினருடன் பல மைல்கள் நடந்த சுனைனா

0
172

சுமைகளை தூக்கிக்கொண்டு மலைப்பகுதிகளில் படக்குழுவினருடன் பல மைல்கள் நடந்த சுனைனா

நடிகை சுனைனாவிடம் இருக்கும் பண்புகளில் முக்கியமானதே அவர் கதையையும் கதாபாத்திரங்களையும் சரியாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பது தான். அதுமட்டுமல்ல, அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அவரது சிறப்பான நடிப்பிற்காக அவருக்கு பாராட்டுகளையும் வென்று தந்திருக்கின்றன. அவரது அற்புதமான நடிப்பையும் தாண்டி, படபிடிப்பில் அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குறியது. ‘ரெஜினா’ படத்தின் படப்பிடிப்பின் போதும் இதே போன்று ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கேரளாவில் உள்ள தொடுபுழாவை சேர்ந்த மலைப்பகுதிகளில் சில முக்கியமான காட்சிகளை படமாக்கப் பட்டது. அங்கு வாகனங்கள் செல்ல முடியாததால் மொத்த படக்குழுவும் படப்பிடிப்பு தளத்தை அடைய சில மைல் தூரம் நடக்கவேண்டி இருந்தது.
நடிகை சுனைனாவும் தான் கொண்டுவந்த பொருட்களை தூக்கிக்கொண்டு படக்குழுவினருடன் சேர்ந்து நடந்தே சென்றார். இப்படி பல நாட்கள் படமாக்கப் பட்டது. தயாரிப்பாளர் சதீஷ் நாயர், இயக்குநர் டொமின் டி’சில்வா உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் இந்த படத்தில் சுனைனாவின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவு குறித்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.