சிவாஜிகணேசனின் 93-வது பிறந்தநாள்: கவுரவப்படுத்திய கூகுள்

0
207

சிவாஜிகணேசனின் 93-வது பிறந்தநாள்: கவுரவப்படுத்திய கூகுள்

பழம்பெரும் நடிகர் சிவாஜிகணேசன் இதே நாளில் 1928-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் பிறந்தார். காலத்தில் அழியா காவியப்படைப்புகளை தந்த அவர், தன் நடிப்புக்கு ஈடு இணை எவரும் இல்லை என்பதை திரையில் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியவர்.செவாலியர், தாதாசாகேப் பால்கே, பத்மபூசன் உள்ளிட்ட விருதுகளை பெற்றார். நடிகர்திலகம் என அழைக்கப்படும் அவர் தான் நடித்து 1952-இல் வெளியான முதல் படமான பராசக்தியின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார். எந்த படம் நடித்தாலும், அந்த படத்தின் கதாப்பாத்திரமாகவே மாறிவிடுவார். 1961-ஆம் ஆண்டு வெளியான பாசமலர் படத்தில் அனைவரையும் அழ வைத்தார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு உருக்கமாக நடித்திருப்பார். காலத்தால் போற்றப்பட வேண்டிய கலைஞர்களுள் சிவாஜிகணேசனும் ஒருவர்.

அவரை கவுரவப்படுத்தும் வகையில் அவரது பிறந்தநாளான இன்று கூகுள் நிறுவனமானது அவரது புகைப்படத்தை வைத்து சிறப்பு டூடுள் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.