சிம்பு ரசிகர்களுக்கு ஒரே நாளில் டபுள் ட்ரீட்!

0
150

சிம்பு ரசிகர்களுக்கு ஒரே நாளில் டபுள் ட்ரீட்!

நடிகர் சிம்பு சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் சேர்ந்த சிம்பு, புகைப்படங்களை பகிர்ந்து தனது ரசிகர்களை வெறித்தனமாக்கினார்.

நடிகர் சிம்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அவரின் பாடல்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இதற்கிடையே சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் சேர்ந்த சிம்பு, புகைப்படங்களை பகிர்ந்து தனது ரசிகர்களை வெறித்தனமாக்கினார். இதையடுத்து மிகக் குறுகிய காலத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார். அதனால் தனது படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றதற்கு, தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். “முதல் மில்லியனுக்கு ஒரு மில்லியன் நன்றி” என அதில் குறிப்பிட்டிருந்தார் சிம்பு. அவர் உடலைக் குறைத்த பிறகு தான் இன்ஸ்டாகிராமில் சேர்ந்தார் என்பதும், அன்றிலிருந்து சமூக வலைதளங்களை தெறிக்க விடுவதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஈஸ்வரன் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. படத்தில் இடம் பெற்றுள்ள ‘மாங்கல்யம்’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சிம்புவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் இரட்டை சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.