சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க முதல்வரிடம் கோரிக்கை

0
197

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க முதல்வரிடம் கோரிக்கை

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களையும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உரிய முடிவு தெரிவிப்பதாக முதல்வர் உறுதி அளித்ததாகவும் குறிப்பிட்டார். “சின்னத்திரை படப்பிடிப்பு நடந்தால் சுமார் 2000 தொழிலாளர்கள் பயன்பெறுவர்” என்றும் அவர் கூறினார்.