சின்னஞ்சிறு கிளியே : தணிக்கை குழுவின் பாராட்டுடன் யு சான்றிதழ்!

0
168

சின்னஞ்சிறு கிளியே : தணிக்கை குழுவின் பாராட்டுடன் யு சான்றிதழ்!

செண்பா கிரியேஷன்ஸ் செந்தில்நாதன் தயாரிப்பில் சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்கத்தில் சின்னஞ்சிறு கிளியே படம் தயாராகி இருக்கிறது.

மஸ்தான் காதர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நேற்று இப்படம் தணிக்கைக்கு வெளியிடப்பட்டது.

இந்த சூழ்நிலையில் சமூகத்திற்கு மிகவும் தேவையான படம் என்பதால் எந்த வித கட்டுமின்றி யு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை அழகியலோடு உணர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது இப்படம்.

மேலும் ஆங்கில மருத்துவத்தின் விளைவுகளையும் இப்படம் எடுத்தியம்புகிறது. இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.