சினிமா சாகசத்தில் பயணம் செய்ய நீங்கள் தயாரா?
அருணா ஜெயவர்தன இயக்கிய இலங்கைத் திரைப்படமான “மாரியா: தி ஓஷன் ஏஞ்சல்” இஃப்பி 53ல் தங்க மயிலுக்காக போட்டியிடுகிறது
1901 ஆம் ஆண்டு இலங்கையில் (அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்டது ) சினிமா அறிமுகமானது. பிரிட்டிஷ் கவர்னர் வெஸ்ட் ரிட்ஜ்வே மற்றும் இரண்டாம் போயர் போரின் கைதிகளுக்கான தனியார் திரையிடலில் நாட்டில் முதல் முறையாக ஒரு திரைப்படம் காண்பிக்கப்பட்டது. போயர் போரில் பிரிட்டிஷ் வெற்றி, விக்டோரியா மகாராணியின் அடக்கம் மற்றும் எட்வர்ட் VII-ன் முடிசூட்டு விழா ஆகியவற்றை ஆவணப்படுத்திய குறும்படம் அது. சுமார் 22 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சிறிய தீவான இலங்கையில், காலனி ஆட்சி காலத்திலிருந்து இன்று வரை சினிமா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அருணா ஜெயவர்தனா இயக்கிய “மாரியா: தி ஓஷன் ஏஞ்சல்” (2022) சர்வதேச போட்டிப் பிரிவின் கீழ் விரும்பப்படும் தங்க மயில் விருதுக்காக போட்டியிடுகிறது. நடுக்கடலில் கூட்டமாக சென்ற மீனவர்கள் தற்செயலாக கண்டுபிடிக்கும் விஷயம் சுற்றியே இத்திரைப்படம் நகர்கிறது. இது தெய்வீக தலையீடா? அல்லது தாங்களாகவே ஒருவரையொருவர் வெவ்வேறு கோணத்தில் பார்க்க அனுமதிப்பது மட்டும்தானா? “மாரியா: தி ஓஷன் ஏஞ்சல்” இந்த பயணத்தை ஆராய்கிறது.