சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா, ஸ்ரீ லீலா நடிக்கும்  ‘VD12’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது!

0
133

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா, ஸ்ரீ லீலா நடிக்கும்  ‘VD12’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது

டோலிவுட் ஸ்டார் விஜய் தேவரகொண்டா, தீவிரமான ஒரு ஆக்‌ஷன் திரில்லர் கதைக்காக
‘ஜெர்சி’ புகழ் கௌதம் தின்னனுரியுடன் இணைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே! இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘VD12’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சாரதி ஸ்டுடியோவில் தொடங்கிய இந்த படப்பிடிப்பில், படத்தின் முன்னணி நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

விஜய்யின் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில், விஜய் தீவிரமாக துப்பாக்கியை பிடித்துள்ள அதே சமயம் அழகாகவும் இருக்கிறார். இந்த முதல் கிளிம்ப்ஸ் போஸ்டரில் அவரது தோற்றம் அவுட் ஆஃப் போகஸில் உள்ளதால் படத்திற்காக அவர் எப்படி மாறியுள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

கௌதம் இயக்கும் இப்படத்தில் ஸ்ரீ லீலா நாயகியாக நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.