சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் விமர்சனம் : நவீன விஞ்ஞானம் கலந்த மாயாஜாலக் கதையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கலாம், ரசிக்கலாம், சிரிக்கலாம் | ரேட்டிங்: 3/5

0
473

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் விமர்சனம் : நவீன விஞ்ஞானம் கலந்த மாயாஜாலக் கதையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கலாம், ரசிக்கலாம், சிரிக்கலாம் | ரேட்டிங்: 3/5

லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் கே.குமார் தயாரித்து 11:11 புரொடக்ஷன்ஸ் டாக்டர் பிரபு திலக் வெளியீட்டில் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் விக்னேஷ்.ஷா.
இதில் சிவா, மேகா ஆகாஷ், அன்ஜு குரியன், மனோ, பாலா, மாகாபா ஆனந்த், திவ்யா கணேஷ், சாரா, பக்ஸ், கல்கி ராஜா, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- திரைக்கதை-பூபதி செல்வராஜ், வசனம்-ஷிரீனிக் விஸ்வநாதன், ஒளிப்பதிவு- ஆர்தர் வில்சன், இசை-லியோன் ஜேம்ஸ், நடனம் -சான்டி, படத்தொகுப்பு-பூபதி செல்வராஜ், ஃபாஷில், கலை-துரைராஜ், ஒலி-உதயகுமார், பாடல்கள்- கோ ஷேஷா, சண்டை- போனிக்ஸ் பிரபு, ஆடை-டோரதி ஜேய், தயாரிப்பு நிர்வாகி-கோபி தன்ராஜ், தயாரிப்பு மேற்பார்வை-மனோஜ் குமார், மக்கள் தொடர்பு- யுவராஜ்.

உணவு டெலிவிரி செய்யும் கம்பெனியில் வேலை செய்யும் சிவா, காதல் திருமணம் செய்ய நினைக்க அது நடக்காமல் போக சிங்கிளாக இருப்பதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். அதே சமயம் விஞ்ஞானி சாரா செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிபிஷல் இன்டலிஜென்ஸ்)  மூலம் சிங்கிளாக இருக்கும் இளைஞர்களுக்கு துணையாக அவர்களுடன் பேசி, பழகி, உதவிகள் செய்யும் பெண்ணை மையமாக வைத்து ஸ்மார்ட்போனை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அவரின் முயற்சிக்கு பெரும் பணஉதவி செய்யும் பகவதி பெருமாள் இது பெற்றி பெற்றால் கோடிகளில் சம்பாதிக்க திட்டம் போடுகிறார். விஞ்ஞானி சாரா வெற்றிகரமாக இந்தக் கருவியை கண்டுபிடித்து சிம்ரன் என்று பெயர் சூட்ட, உயிர், உடல் இல்லாத ஸ்மார்ட்போனில் பேசும் பெண்ணாக வலம் வருகிறாள். விஞ்ஞானி ஷாராவிடமிருந்து ஸ்மாhட்போன் சிம்ரனை திருடர்கள் இரண்டு பேர் திருடிச் சென்று செல்போன் கடையில் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்று விடுகின்றனர். இந்நிலையில் அந்த சிம்ரன் ஸ்மார்ட்போனை சிவா 6000 ரூபாய் கொடுத்து வாங்கி வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார். அதன் பிறகு செல்போனிலிருக்கும் சிம்ரன் சிவாவிடம் பேச ஆரம்பிக்கிறார். முதலில் நம்ப மறுக்கும் சிவா, சிம்ரனின் பேச்சு, தன் தொழிலுக்கு உதவிகள் செய்து நல்ல ஐடியாக்களை கொடுத்து, லாபத்தை பார்க்க வைக்க, பேரும் புகழும் சிவாவிற்கு வந்து சேருகிறது. இன்ஸ்டாகிராமில் பிடித்த பெண்ணான அன்ஜு குரியனிடம் பேச வைத்து நட்பாக பழகவும் சிம்ரன் சிவாவிற்கு உதவி செய்கிறாள். நாளடைவில் சிம்ரனுக்கு சிவாவிடம் ஈர்ப்பு ஏற்பட, சிவாவை காதலிக்க தொடங்குகிறாள். இதனை சிம்ரன் சிவாவிடம் தெரிவிக்க, சிவா காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். அன்ஜு குரியனைத்தான் காதலிக்கிறேன், ஸ்மார்ட்போனை காதலிக்க மாட்டேன் என்று சிவா திட்டவட்டமாக கூறிவிடுகிறார். இதனால் சிவாவை பழி வாங்க நினைக்கும் ஸ்டார்ட்போன் சிம்ரன் என்ன செய்தாள்? சிவாவால் சிம்ரனிடமிருந்து தப்பி;க்க முடிந்ததா? தொழில், காதல் இரண்டிலும் சிக்கல் உருவாக்கும் சிம்ரனால் பாதிக்கப்பட்ட சிவா என்ன செய்தார்? விஞ்ஞானி சாரா, பகவதி பெருமாள் ஆகியோர் தொலைந்த ஸ்மார்ட்போன் சிம்ரனை கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிங்கிள் ஷங்கராக சிவா, தன்னுடைய டைமிங் காமெடி, ஸ்மார்டபோனிடம் படம் முழுவதும் பேசுவது, காதலியுடன் நெருங்கி பழக எடுக்கும் முயற்சி, ஸ்மார்ட்போனால் நல்லதும் நடக்க, கெட்டதும் நடக்க என்ன செய்வது என்று செய்வதறியாமல் தவிப்பது, தன் நண்பன் சந்தேகப்படும் போது சமாளிப்பது, முடிந்தவரை நடனமும் ஆடி, இறுதியில்   எந்திர பொம்மை கதாபாத்திரங்களுடன் சண்டையும் போட்டு படத்தில் தோய்வு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதில் வெற்றியும் பெறுகிறார் சிவா. வெல்டன்.

அழகிய ஸ்மார்ட்போன் சிம்ரனாக மேகா ஆகாஷ், முதலில் கலகல சிம்ரனாக இருந்து பின்னர் லகலக சிம்ரனாக மாறி சிவாவை படாதபாடு படுத்துவது வித்தியாசமாக உள்ளது. அவர் வரும் காட்சிகள் முழுவதும் சிங்கிள் பிரேமில் வந்தாலும் அலுப்பு ஏற்படாதவாறு சிவாவிடம் பேசி, தன்னுடைய எண்ணத்தையும், நினைப்பையும் செயல்படுத்தும் அதீத திறன் வாய்ந்த ஆர்ட்டிபிஷல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்ப கருவியாக முன்னிறுத்தி செய்யும் காரியங்கள் ரசிக்க வைக்கிறது.

பாடகி, சோசியல் மீடியா இன்ஃபூலியன்சர் காதலி துளசியாக அன்ஜுகுரியன் மாடர்ன் யுவதியாக அம்சமான தேர்வு, அளவான நடிப்பை கொடுத்து மனதில் இடம் பிடிக்கிறார்.

சிவாவின் தந்தை பாஸ்கரனாக மனோ மனைவியை இழந்து ஐம்பதி வயதை கடந்தாலும் இளமை துள்ளலுடன் மறுமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு பார்க்காத காதலியை நினைத்து ஏங்குவதும், அவருக்காக மதம் மாறி அளப்பறை பண்ணுவதும் என்று படத்தில் அதகளம் பண்ணுகிறார்.

நண்பன் விக்கியாக மாகாபா ஆனந்த், அவரின் மனைவி அனிதாவாக திவ்யா கணேஷ்  சபலமும், சந்தேகமும்  கலந்த பொருத்தமான ஜோடி.மற்றும் விஞ்ஞானி மாதேஷாக ஷாரா, தொழிலதிபர் ஹம்ஷாவாக பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், கல்கி ராஜா, மொட்ட ராஜேந்திரன் அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு சிறப்பு செய்திருக்கின்றனர்.

சிவாவையும், மேகா ஆகாஷையும், தனித்தனியே காண்பித்தாலும், ஒன்றாக இணைத்து காட்சிக் கோணங்களுக்கு உயிர் கொடுத்து, வித்தியாசமான கோணத்திலும், எந்திர பொம்மைகளுடன் சண்டை போடுவது என்று பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு காட்சிப்படுத்தி குறை கூறாதபடி அழுத்தமாக கொடுத்து திறமையை நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன்.

லியோன் ஜேம்ஸ் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

திரைக்கதை-பூபதி செல்வராஜுடன் விக்னேஷ்.ஷா, வசனம்-ஷிரீனிக் விஸ்வநாதன்,நடனம் -சான்டி, படத்தொகுப்பு-பூபதி செல்வராஜ், ஃபாஷில், கலை-துரைராஜ் ஆகியோர் படத்தின் வெற்றிக்கு தூணாக இருந்து உழைத்துள்ளனர்.
ஐபோன் சிரியும் அயனாவரம் ரவியும் என்ற குறும்படத்தை சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்று நவநாகரீகமாக பெயர் வைத்து பெரிய திரைக்கு வந்திருக்கும் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் விக்னேஷ்.ஷா. சமீப காலமாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாடுகளில் முயற்சியும், ஆராய்ச்சியும் செய்து வெற்றிகரமாக சில துறைகளில் நுழைந்து சாதனை படைத்திருக்கும் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான சிறிய சாம்பிளாக தமிழில் வெளிவந்திருக்கும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் படம். ஆக்குவதும், அழிப்பதும் இனிமேல் ஸ்மார்ட்போன் கையில் தான் உள்ளது என்பதை மறைமுகமாக சொல்லி, குறுக்கு வழியில் சம்பாதிப்பது நிக்காது, நேர் வழியில் சம்பாதிப்பது தான் நிலைத்து நிற்கும் என்ற கருத்தையும் உள்குத்தாக வைத்து இயக்கியிருக்கிறார் விக்னேஷ்; ஷா. படம் முழுவதும் லாஜிக் பார்க்கக்கூடாது என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுவதால், லாஜிக் இல்லா மேஜிக் செய்து இந்தப்படத்தை காமெடி கலாட்டாவாக கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் விக்கேஷ் ஷா.

லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் கே.குமார் தயாரித்து 11:11 புரொடக்ஷன்ஸ் டாக்டர் பிரபு திலக் வெளியீட்டில் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் நவீன விஞ்ஞானம் கலந்த மாயாஜாலக் கதையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கலாம், ரசிக்கலாம், சிரிக்கலாம்.