சிக்கல்கள் தீர்ந்தது…! ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம்!!

0
196

சிக்கல்கள் தீர்ந்தது…! ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம்!!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ படத்தின் சிக்கல்கள் தீர்ந்து ரிலீசுக்குத் தயாராகி உள்ளது.

அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் அடங்காதே என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீக்ரீன் புரொடக்சன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.இந்தப் படத்தில் நடிகை சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். சுரபி, மந்த்ரா பேடி, யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் பணிகள் முன்னரே முடிக்கப்பட்டு இசை வெளியீட்டு விழா கூட நடந்து முடிந்துவிட்டது. பின்னர் படத்தின் தணிக்கையில் சிக்கல் ஏற்பட்டதால் இன்று வரை ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்தது. தற்போது மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.

அதையடுத்து படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.