சாயம் விமர்சனம்: சாயம் மனதை சாதி பூசி வெளுக்கும் மையம்

0
99

சாயம் விமர்சனம்: சாயம் மனதை சாதி பூசி வெளுக்கும் மையம்

ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படத்தை  எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்டனி சாமி.
இதில் விஜய் விஷ்வா என்ற அபி சரவணன், ஷைனி, பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-நாகா உதயன், ஒளிப்பதிவு-கிறிஸ்டோபர் மற்றும் சலீம், படத்தொகுப்பு-முத்து முனியசாமி, பாடல்கள் – யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன், மக்கள் தொடர்பு-கேஎஸ்கே.செல்வா.

ஊர்த்தலைவராக இருக்கும் பொன்வண்ணனும், அவருக்கு உறுதுணையாக போஸ் வெங்கட்டிற்கும் ஊர் நாட்டு கணக்குப்பிள்ளையாக வலது கையாக வேற்று சாதிக்காரரான இளவரசு பல உதவிகளை செய்து வருகிறார்.ஊரில் தனது சாதியை மட்டுமே உயர்ந்த சாதி என்று வன்மத்தோடு சுற்றித்திரிந்து வன்முறையை கையாண்டு வருபவர் வில்லனாக வரும் ஆண்டனி சாமி. பொன்வண்ணன் மகனும் (அபி சரவணன்) இளவரசு மகனும் வேற்று சாதிக்காரர்களாக இருந்தாலும் உயர் தோழர்களாக பள்ளி, கல்லூரி இவர்களின் நட்பு பிரிக்க முடியா சக்தியாக இருக்கிறது. உயர் சாதியில் படிக்கும் ஒரு மாணவி இளவரசு மகனை துரத்தி துரத்தி காதலிக்க இதற்கு பிடிக்கொடுக்காமல் நழுவி விடுகிறார். இதற்கிடையே போஸ் வெங்கட்டின் அண்ணன் மகளான ஷைனி ஒரு தலையாக முறைப்பையனான அபி சரவணனை காதலிக்கிறார். இதனால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் அனைவரும் முடிவெடுக்கிறார்கள். காதலித்த நாயகனே தனக்கு கணவனாக கிடைக்கப்பெறுகிறானே என்று நாயகி சந்தோஷத்தில் இருந்தாலும் நாயகன் அபி சரவணனுக்கோ நாயகியை பிடிக்காமல் திருமணத்தை நிறுத்த சொல்லுகிறார்.இந்நிலையில் இளவரசு மகன் ஷைனியை காதலிப்பதாக பொய் புரளி செய்து ஆண்டனி சாமி அபிசரவணனை சீண்ட, ஆத்திரத்தில் இளவரசு மகனிடம் அபி சரவணன் சண்டை போட இதில் தவறுதலாக கிழே விழுந்து இளவரசு மகன் இறக்கிறார். பிரச்சனை சாதி கலவரமாக வெடிக்க இதற்கு காரணமான அபிசரவணனை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அங்கேயும் அபி சரவணனனை சிறையில் போட்டுத் தள்ள  தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அபி சரவணனனுக்கு அவரின் சாதிக்காரர் உதவி செய்து சாதி வெறி ஏற்றுகிறார். வெளியே வரும் அபி சரவணன் சாதி வெறி பிடித்தவராக மாறி பல கொலைகளுக்கு காரணமாகிறார்.அதன்பிறகு அபி சரவணனின் தடம் மாறும் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

அபி சரவணனன் என்கிற விஜய் விஷ்வா  நண்பனாகவும், சாதி வெறி பிடித்த எதிரியாகவும் நடித்து, ஆக்ஷன், நடனம் என்று பல முயற்சிகள் செய்திருக்கிறார்.இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடித்த ஷைனி காதலியாக அபி சரவணனை நினைத்து கடைசியில் நிறைவேறாத ஆசையோடு இறந்து கண் கலங்க செய்கிறார்.பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் பக்கபலமாக நடித்துள்ளனர்.

நாகா உதயன் இசையும், கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஒளிப்பதிவும் சிறப்பு. முத்துமுனியசாமி படத்தொகுப்பு பரவாயில்லை ரகம்.

படத்தின் தயாரிப்பாளர், படத்தின் இயக்குனர், படத்தில் வில்லன் என்ற மூன்று வேறு கோணங்களில் தன் திறமையை வெளிக்கொணர்ந்து முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளார் இயக்குனர் ஆண்டனி சாமி. முதல் பாதி ஹீரோவை நல்லவராகவும், இரண்டாம் பாதி ஹீரோவையே வில்லனாகவும், மாணவர்களின் வாழ்க்கையில் சாதி எத்தகைய மாற்றத்தையும், வெறுப்புணர்ச்சியையும், பழி வாங்குதலையும் தூண்டுகிறது என்பதை தன் வில்லத்தனத்தனத்தோடு இணைத்து சாதி வேறுபாடு, சாதி ஒற்றுமை என்று இரண்டையும் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் ஆண்டனிசாமி.

மொத்தத்தில் ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் சாயம் மனதை சாதி பூசி வெளுக்கும் மையம்.