சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர் விநாயகன்

0
107

சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர் விநாயகன்

மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விநாயகன் கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் இவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

அப்போது அவர் பேசியது, கேரளாவில் மீ டூ பற்றி பலரும் பேசி வருகிறார்கள். அது என்னவென்று எனக்கு புரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு வைத்து கொள்வது தான் மீ டூ வா? எனவும் தெரியவில்லை. ஒரு பெண்ணை பார்க்கும் போது அந்த பெண்ணை எனக்கு பிடித்திருந்தால், நான் அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று என்னுடன் உறவு கொள்ள விருப்பமா? என்று கேட்பேன். அவர் விருப்பம் தெரிவித்தால் அவருடன் உறவு வைத்து கொள்வேன். இப்படி நான் பலரிடம் உறவு வைத்துள்ளேன் என்றார்.

விநாயகனின் இந்த கருத்துக்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். நடிகை பார்வதி, இயக்குனர் விது வின்சென்ட் உள்ளிட்ட பல திரைத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் விநாயகன் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “நான் பெண்களுக்கு எதிராக அதன் தீவிரத்தை அறியாமல் சில கருத்துக்களை தெரிவித்துவிட்டேன். இது யாரையாவது பாதித்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.