சத்தம் இல்லாமல் வளரும் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி..! புதிய சாதனைக்கு நெகிழ்ச்சியுடன் கூறிய நன்றி!!

0
247

சத்தம் இல்லாமல் வளரும் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி..! புதிய சாதனைக்கு நெகிழ்ச்சியுடன் கூறிய நன்றி!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த ஷிவாங்கி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நிலையில்… சத்தமே இல்லாமல் செய்த சாதனை  குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்….

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக புகழ், ஷிவாங்கி, ஷரத், பாலா உள்ளிட்ட கோமாளிகளின் நகைச்சுவையை ரசிகர்கள் கொண்டாடினார்கள். சமீபத்தில் குக்வித் கோமாளி சீசன் 2 முடிவடைந்தது. அதில் கனி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக பெரிய காரணம் என்றால், அது கோமாளிகள் செய்யும், சிறு பிள்ளை தனமான விஷயங்களும், அவர்களது காமெடியான பேச்சும் தான். விரைவில் மூன்றாவது சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிக ரசிகர்களைப் பெற்ற ஷிவாங்கி சிவகார்த்திகேயன் உடன் ‘டான்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். மேலும் உதயநிதி ஸ்டாலின் உடன் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கிலும் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் புகழ் விஜய் சேதுபதி, அருண் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி ஆகியோரும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஷிவாங்கியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 3 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் கணக்கை துவங்கிய ஷிவாங்கி 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றார். இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் ஷிவாங்கியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 2 மில்லியனாக இருந்த நிலையில் தற்போது 3 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.