க்ரைம் த்ரில்லரில் உருவாகியுள்ள சரத்குமாரின் ’இறை’ வெப் சீரிஸ்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
158

க்ரைம் த்ரில்லரில் உருவாகியுள்ள சரத்குமாரின் ’இறை’ வெப் சீரிஸ்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

சரத்குமாரின் ’இறை’ வெப் சீரிஸின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துவரும் நடிகர் சரத்குமார், கடந்த ஆண்டிலிருந்து ‘இறை’ வெப் சீரிஸிலும் நடித்து வந்தார். இந்த வெப் சீரிஸை ராதிகா தனது ராடன் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ’தூங்காவனம்’, ‘கடாரம் கொண்டான்’ பட இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார்.

”க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்த வெப் சீரிஸ் குடும்ப ஆடியன்ஸ்களும் பார்க்கும் வகையில் உருவாக்கப்படு வருகிறது” என்று ராதிகா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ‘இறை’ வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ஆஹா ஓடிடியில் வரும் 18 ஆம் தேதி வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.