கொரோனா தாக்கம் – சிரஞ்சீவி – ராம்சரண் நடிக்கும் ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

0
130

கொரோனா தாக்கம் – சிரஞ்சீவி – ராம்சரண் நடிக்கும் ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதில் ஒரு பங்காக சினிமா தியேட்டர்கள் இயங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் தெலுங்கில் கொராடாலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள “ஆச்சார்யா” எனும் திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகி இருந்தது. இந்நிலையில் “ஆச்சார்யா” பட குழுவினர் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். அதன்படி ஏப்ரல் 1ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.