கொரோனா தடுப்பு பணிக்காக வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி

0
214

கொரோனா தடுப்பு பணிக்காக வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

அதைத்தொடர்ந்து நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கினார்கள். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 25 லட்சம் ரூபாயை முதலமைச்சரிடம் வழங்கினார். நடிகர் அஜித் ஆன்லைன் மூலம் ரூபாய் 25 லட்சம் கொடுத்தார். தற்போது வைரமுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூபாய் 5 லட்சம் வழங்கி இருக்கிறார்.