கொம்பு வச்ச சிங்கம்டா விமர்சனம்: கொம்பு வச்ச சிங்கம்டா பொங்கலுக்கு நாலு கால் பாய்ச்சலில் சீறிச்செல்ல முயற்சிக்கிறது

0
232

கொம்பு வச்ச சிங்கம்டா விமர்சனம்: கொம்பு வச்ச சிங்கம்டா பொங்கலுக்கு நாலு கால் பாய்ச்சலில் சீறிச்செல்ல முயற்சிக்கிறது

ரேதான் சினிமாஸ் இந்தர்குமார் வழங்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.ஆர். பிராபாகரன்.
இதில் சசிகுமார், மடோனா செபாஸ்டியன், மறைந்த இயக்குனர் மகேந்திரன், சூரி, ஹரிஷ் பேராடி, இந்தர்குமார், அபி சரவணன், ராகவ் விஜய், சந்தோஷ் கிருஷ்ணன், லோகு, தீபா ராமானுஜம், சுந்திரபாண்டியன் துளசி, மருது லீலா பாட்டி, அருள்தாஸ், சங்கிலி முருகன், ஸ்ரீபிரியங்கா, ரஞ்சனா நாச்சியார் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-என்.கே.ஏகாம்பரம், இசை-திபு நிணன் தாமஸ், எடிட்டிங்-டான் போஸ்கோ, பாடல்-யுகபாரதி, ஜி.கே.பி., அருண் ராஜ் காமராஜ், சண்டை-அன்பறிவு, நடனம்-நந்தா, பிஆர்ஒ-நிகில்.

கரூர் மாவட்டத்தில் ஊர் தலைவராக மதிப்புடன் இருப்பவர் மகேந்திரன். இவரது மகன் சசிகுமார் சாதி மதம் பாராமல் தன் நண்பர்கள் ஐந்து பேருடன் ஒற்றுமையாக இருக்கிறார். ஊரில் சமுத்துவம் பேசி ஏற்றத் தாழ்வு பார்க்காமல்  அனைவரையும் அரவணைத்து போவது சசிகுமாரின் சொந்த சமூகத்திற்கே பிரச்னையாக இருக்கிறார். இதற்கிடையே சசிகுமார் தன் தந்தைக்கு எதிரியாக கருதப்படும் ஹரீஷ் பேராடியின் மகள் மடோனா செபாஸ்டியனை விரும்ப, வேறு வழியில்லாமல் ஹரீஷ் பேராடி தன் மகளின் விருப்பத்திற்காக தந்தை மகேந்திரனிடம் சசிகுமாரை சம்பந்தம் பேச வருகிறார். சம்பந்தியாக இருவரும் சமரசம் செய்து கொண்டு திருமணத்தை தள்ளி வைக்கின்றனர். அதற்குள் உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஹரீஷ் பேராடியை ஆதரிக்குமாறு தந்தை மகேந்திரன் சொல்ல வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவிக்கிறார் சசிகுமார். ஏற்கனவே இந்தர்குமார் எதிர் கோஸ்டிக்கு சசிகுமார் ஆதரவு கொடுக்க இருந்ததால் தன் நண்பர்கள் அபிசரவணனுடன் சேர்த்து மூன்று பேரை அனுப்புகிறார். மூன்று நண்பர்கள் இரு பிரிவுகளாக தனித்தனியாக தேர்தலில் வேட்பாளர் வெற்றி பெற உழைக்கின்றனர். இதில் ஹரிஷ் பேராடி வெற்றி பெற, எதிர்பாராத விதமாக இந்தர்குமாருடன் இருக்கும் நண்பர் கொல்லப்பட, இதற்கு காரணம் சசிகுமார் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் தான் என்று போலீஸ் பிடித்து சிறையில் அடைக்கின்றனர். பின்னர் ஜாமீனில் வெளியே வரும் சசிகுமாருடன் இருக்கும் இன்னொரு நபர் கொல்லப்பட, ஊரில் ஜாதி கலவரம் வெடிக்க, சசிகுமாரின் மீதி நண்பர்கள் அச்சத்துடன் உயிருக்கு பயந்து வாழ்கிறார்கள். இறுதியில் யார் இந்த கொலைகளுக்கு காரணமானவர்கள்? உண்மையான குற்றவாளி யார்? சசிகுமார் இதை கண்டுபிடித்து தண்டனை கொடுத்தாரா? எதனால் இந்த கொலை நடந்தது? நண்பர்களை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

சசிகுமார் கிராமத்து இளைஞராக எப்பொழுதும் வரும் பொங்கிஎழும் கதாபாத்திரம், வசனங்களால் சமுத்துவம் பேசி, இறுதியில் குற்றவாளியாக சந்தேகிக்கும் நபர் இல்லாமல் எதிர்பாராத திருப்பமாக தந்தையை காணும் போது அதிர்ச்சியாகும் தருணம், எரிக்கும் பார்வையோடு வெளியேறுவது என்று அக்மார்க் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மடோனா செபாஸ்டியன் காதல் தேவதையாக வந்து போகிறார்.வில்லத்தனமாக நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்  மறைந்த இயக்குனர் மகேந்திரன், நண்பராக சூரி மற்றும் ஹரிஷ் பேராடி, இந்தர்குமார், அபி சரவணன், ராகவ் விஜய், சந்தோஷ் கிருஷ்ணன், லோகு, தீபா ராமானுஜம், சுந்திரபாண்டியன் துளசி, மருது லீலா பாட்டி, அருள்தாஸ், சங்கிலி முருகன், ஸ்ரீபிரியங்கா, ரஞ்சனா நாச்சியார் ஆகியோர் பங்களிப்பு படத்தின் விறுவிறுப்புக்கு துணை போகின்றனர்.

என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு கிராமத்தின் எழிலை அற்புதமாக கொடுத்து, ஜாதி சண்டைகளையும், கலவரத்தையும் நம்பகத்தன்மையோடும், பாடலை கலர்ஃபூல்லாகவும் கொடுத்துள்ளார்.

திபு நிணன் தாமஸ் இசையில் யுகபாரதி, ஜி.கே.பி, அருண்ராஜ் காமராஜ் ஆகியோர் பாடல்கள் படத்தில் தேனிசை தென்றலாக வருடுகிறது.

டான் போஸ்கோவின் படத்தொகுப்பு கச்சிதம், அன்பறிவின் சண்டை காட்சிகள் படத்தின் ஆக்ஷன்; காட்சிகளுக்கு உத்திரவாதம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கும்-எஸ்.ஆர்.பிரபாகரன். கிராமத்து சாதி சண்டையில் நண்பர்கள் வாழ்க்கை சின்னாபின்னமாகி பிரியும் நிலைமையிலும், இறுதிக்காட்சியில் சுதாரித்துக் கொண்டு நட்பாக ஒற்றுமையாக இருந்து போராடி ஜெயிப்பதே படத்தின் திரைக்கதை. ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரவென்று செல்லும் திரைக்கதை சில இடங்களில் ஊகிக்க முடிந்தாலும் க்ளைமேக்சில் எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் அதை சிறப்பாக  காட்சிப்படுத்தி இயக்கியுள்ளார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

மொத்தத்தில் ரேதான் சினிமாஸ் இந்திரகுமார் வழங்கும் கொம்பு வச்ச சிங்கம்டா பொங்கலுக்கு நாலு கால் பாய்ச்சலில் சீறிச்செல்ல முயற்சிக்கிறது.