கேரளாவில் எதிர்ப்பு…! ரஜினியின் ‘ஜெயிலர்’தலைப்பை மாற்ற பட குழுவினர் மறுப்பு…!! காரணம் என்ன?
ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் சிறை வார்டன் கதாபாத்திரத்தில் வருகிறார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், யோகிபாபு, சுனில் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். படத்தில் இடம் பெற்ற காவாலா பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஜெயிலர் படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் ஜெயிலர் படத்துக்கு திடீர் சிக்கல் ஏற்படுத்தும் விதமாக தலைப்பை மாற்றக்கோரி கேரளாவில் கோரிக்கை எழுந்துள்ளது.
அங்கு ஜெயிலர் என்ற பெயரிலேயே புதிய மலையாள படமொன்று தயாராகி உள்ளது. அதில் தியான் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதைக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்றும், எனவே கேரளாவில் மட்டும் ரஜினியின் ஜெயிலர் பட தலைப்பை மாற்றி வேறு பெயரில் வெளியிடுமாறும் வற்புறுத்தி உள்ளனர். ஆனால் தலைப்பை மாற்ற ரஜினியின் ஜெயிலர் பட குழுவினர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.