கேஜிஎஃப் 2 சேட்டிலைட் உரிமையைக் கைப்பற்றிய ஜீ தமிழ்

0
164

கேஜிஎஃப் 2 சேட்டிலைட் உரிமையைக் கைப்பற்றிய ஜீ தமிழ்

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஜூலை மாதம் 16-ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்ட்ரா என பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால்,‘கேஜிஎஃப் 2’ புதிய வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ‘கேஜிஎஃப் 2’ படத்தின் தென்னிந்திய சேட்டிலைட் உரிமையை ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தினர் கைப்பற்றியுள்ளனர். ‘கேஜிஎஃப்’ முதல் பாகத்தை கலர்ஸ் தமிழ் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.