‘குதிரைவால்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
279

‘குதிரைவால்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேஷனுடன், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார். கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல், சவுமியா ஜகன் மூர்த்தி, ஆனந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் மார்ச் 4-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 18-ந்தேதி வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் படத்தின் டீசர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.