குக்வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமியா இது..! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
243

குக்வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமியா இது..! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

தாயுடன் கியூட்டாக போஸ் கொடுக்கும் பவித்ராவை ரசிகர்கள் மேலும் ரசிக்கத் தொடங்யுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி ஷோ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மக்களின் ஏகோபித்த ஆதரவால் சின்னத் திரையில் நம்பர் 1 நிகழ்ச்சி என்ற இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது. இரண்டு சீசன்கள் முடிந்த நிலையில் 3வது சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முதல் சீசனில் ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில், 2வது சீசனில் அஸ்வின், பவித்திரா, சகிலா, கனி, தர்ஷா, டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

2வது சீசன் முடிவடைந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஸ்டாராக மாறியுள்ளனர். பலருக்கும் புதிய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. காமெடியில் கலக்கும் புகழுக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் பவித்ராவுக்கும் புதிய பட வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் திரைப்பட உலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், தன் தாயாருடன் அவர் குழந்தை பருவத்தில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தாயுடன் கியூட்டாக போஸ் கொடுக்கும் பவித்ராவை ரசிகர்கள் மேலும் ரசிக்கத் தொடங்யுள்ளனர். அந்த புகைப்படத்தில் அவ்வளவு அழகாக பவித்ரா இருப்பதாக நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். சிறு வயதில் கவுன் அணிந்து, தலையில் ஒற்றை ரோசா வைத்து சிரித்த முகத்துடன் இருக்கும் பவித்ராவின், தோள்களில் தாய் கை போட்டு போஸ் கொடுக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தையும், தற்போது அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தையும் ஒன்றாக இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டு புகைப்படங்களையும் பார்த்த நெட்டிசன்கள், சிறுவயதில் இருக்கும் அதே கியூட்னஸ் இப்போதும் பவித்ராவின் முகத்தில் பார்க்க முடிகிறது என பூரிப்புடன் தெரிவித்துள்ளனர். சிரித்த முகத்துடன் இருக்கும் பவித்ரா இன்னும் பல உயரங்கள் அடைய வேண்டும் எனவும் வாழ்த்துகளையும் கூறி இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.