கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் டாப்ஸி; கவனம் ஈர்க்கும் புதிய போஸ்டர்

0
58

கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் டாப்ஸி; கவனம் ஈர்க்கும் புதிய போஸ்டர்

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். டாப்சிக்கு இந்தியில் சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அமைகின்றன. இவர் கைவசம் இந்தியில் பல படங்கள் உள்ளன.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மித்தாலி ராஜின் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்கள் கிரிக்கெட்டை மட்டுமே ரசித்து பார்த்து வந்தவர்களை கடந்த மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இவர் தலைமையிலான அணியிலான ஆட்டத்தின் மூலம் பார்க்க வைத்தவர் மித்தாலி ராஜ் என்று சொல்லலாம். ஆனால், இறுதிப்போட்டி வரை தனது தலைமையிலான அணியை கொண்டு வந்து தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாறு படத்தை ‘சபாஷ் மித்து’ என்ற பெயரில் இயக்குநர் ஸ்ரீஜித் முக்கர்ஜி இயக்கி வருகிறார். இப்படத்தில் மித்தாலி ராஜாக டாப்சி பன்னு நடித்து வரும் நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.