காளிதாஸ் ஜெயராமை இயக்குகிறார் கிருத்திகா உதயநிதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

0
235

காளிதாஸ் ஜெயராமை இயக்குகிறார் கிருத்திகா உதயநிதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் அடுத்தப் பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பிரபல நடிகராகவும், தயாரிப்பாளருமாக உள்ள உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா. பன்முக திறமைக்கொண்ட இவர், ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற இப்படத்தில் நடிகர் சிவா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதன்பிறகு விஜய் ஆண்டனியை வைத்து ‘காளி’ படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வெற்றிப் பெறவில்லை.

கடந்த 3 வருடங்களாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த கிருத்திகா தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். கிருத்திகாவின் மூன்றாவது படமாக உருவாகும் இந்த படத்தில் பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் ஹீரோயினாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார்.

காதலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை சீஃயீஸ்ட் படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. ரிச்சர்ட் எம் நாதன் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். இந்நிலையில் இந்த படம் குறித்து அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது. அதன்படி இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதோடு இந்த படத்தில் நடிக்க உள்ளவர்கள் பற்றிய விபரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்க உள்ளது.