கால் டாக்ஸி விமர்சனம்

0
331

கால் டாக்ஸி விமர்சனம்

கே.டி. கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரிப்பில் கால் டாக்ஸி படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன்.
இதில் சந்தோஷ் சரவணன், அஸ்வினி சந்திரசேகர், நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், கணேஷ், பசங்க சிவக்குமார், முத்துராமன், சினிமா லீ கார்த்திக், பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலி தேவி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-எம்.ஏ.ராஜதுரை, எடிட்டிங்-டேவிட் அஜய், இசை மற்றும் பாடல்-பாணர், நடனம்-இராபர்ட், இருசன், ஸ்டண்ட்-எஸ்.ஆர்,ஹரிமுருகன், மக்கள் தொடர்பு-குமரேசன்.

சென்னையில் கால் டாக்ஸி நிறுவனத்தில் காரை புக் செய்து பயணம் செய்யும் ரவுடிகள் கால் டாக்ஸி டிரைவர்களை கொன்று காரை திருடிச் சென்று விற்று விடுகின்றனர். இது தொடர்கதையாக பல டிரைவர்கள் கொல்லப்பட, கால் டாக்ஸி டிரைவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, போலீஸ் தனி;ப்படை அமைத்து விசாரணையில் ஈடுபடுகின்றனர். ஆனாலும் முன்னேற்றம் ஏற்படாமல் இருக்கிறது. கால் டாக்ஸி டிரைவரான சந்தோஷ் சரவணன் தன் நண்பனின் இறப்பிற்கு காரணமாக கொலையாளிகளை கண்டு பிடிக்க தனியாக களமிறங்குகிறார். இவரின் முயற்சி வெற்றி பெற்றதா? இறுதியில் ரவுடிகளை பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

இதில் சந்தோஷ் சரவணன் புதுமுகமாக இருந்தாலும் தன்னால் முடிந்தவரை யதார்த்தமாக நடித்துள்ளார். வழக்கறிஞராக வரும் அஸ்வினி காதலிக்க மட்டுமே பயன்படுத்தியிருப்பதால் பங்களிப்பு குறைவே. இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், கணேஷ், பசங்க சிவக்குமார், முத்துராமன், பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலி தேவி வந்து போகிறார்கள்.

மற்றும் பத்திரிகையாளர் மற்றும் டப்பிங் கலைஞர் சினிமா லீ கார்த்திக் வில்லனின் தம்பியாக வந்து கொடுத்த கதாபாத்திரத்தை சிரத்தையுடன் செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவு-எம்.ஏ.ராஜதுரை, எடிட்டிங்-டேவிட் அஜய், இசை மற்றும் பாடல்கள் பாணர் இவர்களின் முயற்சி படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம்-பா.பாண்டியன். சமீப காலமாக டிரைவர்கள் கொல்லப்பட்டு கார்கள் திருடுப்போவது சகஜமானதாகிவிட்டது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கால் டாக்ஸி டிரைவர்களைப்பற்றிய திரைக்கதையமைத்து, கார்களை திருடி மற்றொரு மாநிலத்திற்கு நம்பர் பிளேட்டை மாற்றி குறைந்த விலையில் விற்று காசு பார்க்கும் தாதா கும்பலின் நெட்வொர்க் பற்றி விபரத்தை தௌ;ளத்தெளிவாக சொல்லி விழிப்புணர்வோடு குறைந்த முதலீட்டிற்கு கேற்றவாறு முடிந்த வரை சிறப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பா.பாண்டியன். இதனோடு கால் டாக்ஸி டிரைவர்களின் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அவர்களின் அவமானங்களையும் விவரித்து அவர்களும் மனிதர்கள் தான் என்பதை சொல்லியிருக்கும் விதம் அருமை.

மொத்தத்தில் கால் டாக்ஸி டிரைவர்களின் அவல நிலையை சொல்லும் படம்.