கார்த்தி – முத்தையாவின் ‘விருமன்’ படப்பிடிப்பு நிறைவு: கோடையில் ரிலீஸ்

0
136

கார்த்தி – முத்தையாவின் ‘விருமன்’ படப்பிடிப்பு நிறைவு: கோடையில் ரிலீஸ்

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘விருமன்’ படத்தில் நடித்துள்ளார். ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் ’விருமன்’ படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகியாக இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார்.

இப்படத்தின், பூஜை கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெற்று தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் கடந்த 60 நாட்களாக தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கார்த்தி பேசும்போது,

“மதுரை சுற்று வட்டாரத்தில் நல்ல திறமையுடன், சிறப்பான திட்டமிடலால் மொத்தமாக 60 நாள்கள் படபிடிப்பை நடத்தி உள்ளனர் இயக்குநர் முத்தையாவும் , ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும். என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. யதார்த்தமானவர். அவருடன் நடித்த நாள்கள் ஜாலியானவை. மீண்டும் ’விருமன்’ மூலம் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்ததில் சந்தோஷம். படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சூர்யா அவர்களுக்கும் நன்றி” என்றார்.

கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், வேல்முருகன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படம் வரும் 2022 கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.