காதலர் தினத்தையொட்டி மியூசிக் வீடியோவை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- வைரலாகும் படம்

0
117

காதலர் தினத்தையொட்டி மியூசிக் வீடியோவை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- வைரலாகும் படம்

திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்தநிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு மியூசிக் வீடியோ ஒன்றை தயாரிக்கும் பணியில் இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த 17-ம் தேதி நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும், 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக, தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பு பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே வந்திருப்பது, சாதாரண கணவன் – மனைவி சண்டை தான் என்றும், அதனால் அவர்கள் பிரிந்திருப்பதாகவும், இது விவாகரத்து இல்லை என்றும், நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அதோடு, இருவரும் தற்போது அவரவரது பணியில் ஐதராபாத்தில் இருப்பதாகவும், அவர்களிடம் தொடர்ந்து குடும்பத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி பொதுவாக பிரபலங்கள் தங்கள் கணவரை விட்டு பிரியும் போது, பெயருக்குப் பின்னால் இருக்கும், கணவரின் பெயரையும் சமூவலைத்தள பக்கத்தில் நீக்கி விடுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்னும், ஐஸ்வர்யா ஆர் தனுஷ் என்றே, தனது சமூக வலைதளப் பக்கங்களில் கணக்குகளின் பெயரை நீக்காமல் வைத்திருக்கிறார்.

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு, பே பிலிம்ஸ் சார்பில் வெளியிடப்படவுள்ள மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கும் பணியில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். இதற்கான படப்பிடிப்புகள் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நாளை துவங்க உள்ளது. இதையடுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மியூசிக் வீடியோவில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் பணியாற்றும் குழுவினரை இறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஓட்டல் ஒன்றில், மியூசிக் வீடியோ பற்றிய விவாதத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் குழுவினர் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை, பே பிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.