’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்!

0
162

’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த ‘கர்ணன்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் இப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரை பாராட்டினர்.

இந்நிலையில் மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளது. இதை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஏப்ரல் 23) உறுதி செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘கர்ணன்’ திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜும் நானும் மீண்டும் ஒரு முறை கைகோர்க்கிறோம் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முன் தயாரிப்பு நடக்கிறது, அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும்” என்று தனுஷ் பதிவிட்டுள்ளார். தனுஷின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

‘கர்ணன்’ படத்துக்குப் பிறகு, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். இப்படத்துக்குப் பிறகே மாரி செல்வராஜ் – தனுஷ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.