‘கர்ணன்’ வசூலில் அசுர சாதனை :
தமிழகத்தில் மட்டும் ‘கர்ணன்’ திரைப்படம் ஒன்பது நாள் வசூல் என்ன தெரியுமா?
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், தனுஷ் நடித்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கர்ணன்’ படம் வசூலில் சாதனைகளை நிகழ்த்தி வருவதோடு கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இத்திரைப்படத்தின் மூலம் மாரி செல்வராஜ்க்கு பல பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. அதோடு பல பிரபலங்கள் மாரி செல்வராஜை தொலைப்பேசி வயிலாகவும், நேரில் சந்தித்தும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.
படத்தைப் பார்த்த விஜய் சேதுபதி ‘கர்ணன் அருமையான படம்’ என்று பாராட்டியிருந்தார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு ‘நடிப்பு கர்ணா’ என்று பாராட்டினார். நடிகர் விக்ரம் மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று ’கர்ணன்’ படத்தைப் பாராட்டினார்.
தேசிய விருதுகளைக் குவித்த ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் ‘அந்தகன்’ படத்தில் நடித்துவரும் நடிகர் பிரஷாந்த் ’கர்ணன்’ படத்தைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் தாணுவையும் இயக்குநர் மாரி செல்வராஜையும் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். இதனால், படக்குழு மேலும் உற்சாகமடைந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ’கர்ணன்’ முதல் நாள் வசூலாக 10.0 கோடி முதல் 10.40 கோடி வரை வசூல் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் நாள் மட்டுமல்லாது தொடர்ந்து கர்ணன் படம் வசூலில் அசுர சாதனை படைத்துள்ளது.
Day 1 – 10.40 Cr
Day 2- 5.50 Cr
Day 3 – 6.50 Cr
Day 4 – 2.75 Cr
Day 5 – 3.10 Cr
Day 6 – 3.40 Cr
Day 7- 1.75 Cr
Day 8- 1.30 Cr
Day 9- 1.70 Cr
= Total – 36.40 Cr
அதாவது கர்ணன் திரைப்படம் ஒன்பது நாள் முடிவில் தமிழகத்தில் ரூபாய் 36.40 கோடி மொத்த வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.