கர்ணன் படத்தின் முக்கிய அப்டேட்

0
174

கர்ணன் படத்தின் முக்கிய அப்டேட்

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. தனுஷின் 41-வது படமான கர்ணனின் படப்பிடிப்பை திருநெல்வேலி அருகே கிராமம் போன்ற செட் அமைத்து பெரும்பகுதியை படமாக்கியுள்ளனர் படக்குழுவினர். லாக்டவுனுக்கு முன்பே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் தற்போது தனுஷ் டப்பிங் பேசும் படத்தை வெளியிட்டு, கர்ணன் படத்தின் டப்பிங் பணிகள் பெருமளவு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கிடையே இந்தியில் ’அத்ரங்கி ரே’ படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின் ’நானே வருவேன்’, ஹாலிவுட் படம் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார். அவரது நடிப்பில் ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸுக்கு ரெடியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.