‘கர்ணன்’ ஏப்ரல் 9-ந் தேதி திட்டமிட்டபடி வெளியாகும் –
நடிகர் தனுஷ் டுவிட்
தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக S.தாணு தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதனிடையே தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால், கர்ணன் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கர்ணன் படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திட்டமிட்டபடி வெளியாகும் என தனுஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
#Karnan #april9th pic.twitter.com/CTIyZ7IjXt
— Dhanush (@dhanushkraja) April 5, 2021