கருப்பன் ஆர்.பன்னீர்செல்வம் இயக்கும் ஐஸ்வர்யா முருகன்

0
152

காதலை அழிக்கும் ஆணவ கொலை.
‘கருப்பன்’ ஆர்.பன்னீர்செல்வம் இயக்கும் “ஐஸ்வர்யா முருகன்”

“’கருப்பன்’ படத்திற்கு பிறகு, முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் ஒரு கதை பண்ணலாம் என்று யோசிக்கும் போதுதான்.. ரொம்ப நாள் என் மனதில் உருவாக்கி வைத்திருந்த இந்த ஆணவக் கொலை “ஐஸ்வர்யா முருகன்” கதையை உருவாக்கினேன்.

அதன் பின்னணியில் படம் பண்ண நினைத்த போது நிறைய தகவல்கள் கிடைத்தது. மனதை கல்லாக்கிக்க வேண்டியது இருந்தது. அப்படிப்பட்ட நிஜங்களின் பிம்பம் தான் இது.

காதலையும்,வலியையும், பிரிவையும் பல படங்களில் சொல்லிட்டாங்க.ஆனால் இங்கே ஒரு காதல், காதலர்களின் குடும்பங்களைச் எப்படி சிதைத்து .. துயரங்களை உண்டாக்கியது என்ன.. இப்படி பல நிஜங்களை சொல்ற படம் தான் “ஐஸ்வர்யா முருகன்”. வாழ்க்கை உங்களை எந்த எல்லைக்கும் கூட கொண்டுப் போக வைக்கும்” என்றார் டைரக்டர் ஆர்.பன்னீர்செல்வம்.

ஹீரோவாக அருண் பன்னீர்செல்வம் அறிமுகமாகிறார். பக்கத்து வீட்டு பையன் மாதிரி கதைக்கு அருமையாக பொருந்தியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த வித்யாபிள்ளை ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் தெய்வேந்திரன், ஹர்ஷ் லல்வானி, சாய்சங்கீத்,குண்டுகார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா,, நாகேந்திரன்னு புதுமுகங்கள் ஆக்கிரமிப்பில் படம் உருவாகியுள்ளது.
பி.சி ஸ்ரீராமின் உதவியாளர் அர்ஜுன் ஜெனா கேமிரா. ‘ரேணிகுண்டா’ விற்கு இசைஅமைத்த கணேஷ் ராகவேந்திரா இதற்கு இசை அமைக்கிறார்.

எடிட்டிங் ஆண்டனியின் உதவியாளரான ஜான் ஆபிரகாம்.
கலை – முகமது.
சண்டைப்பயிற்சி -தினேஷ். இவர் சண்டை இயக்குநர் ராஜசேகரின் உதவியாளர்.
நடனம் – தஸ்தா.
பாடல்கள்:யுகபாரதி.
pro ஜான்சன்.
தயாரிப்பு மேற்பார்வை:ஜே.சம்பத்குமார்.
தயாரிப்பு: ஜி.ஆர்.வெங்கடேஷ், கே.வினோத்.
கம்பெனி: மாஸ்டர் பீஸ்.