கப்பிங் தெரபி சிகிச்சை எடுத்த விஷ்ணு விஷால்

0
260

கப்பிங் தெரபி சிகிச்சை எடுத்த விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் சமீபத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார்.

விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளங்களில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருவார். இந்த நிலையில் கப்பிங் தெரபி செய்த புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்து, ‛‛கடினமான பயிற்சி, கடினமான மீட்பு” என பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

கப்பிங் தெரபி செய்தால் உடல் மற்றும் மனம் ரிலாக்ஸ் ஆகும் என்கிறார்கள். சீனாவின் பழங்கால மார்ஷியல் ஆர்ட்ஸ்களில் ஒன்றான கப்பிங் தெரபியை ஹாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் கடைப்பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.