கந்தன் ஆர்ட்ஸ் விக்ரம் பிரபு நடிக்கும் “பகையே காத்திரு” படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

0
188

கந்தன் ஆர்ட்ஸ் விக்ரம் பிரபு நடிக்கும் “பகையே காத்திரு” படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

விக்ரம் பிரபு மற்றும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்புகழ் ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் ‘பகையே காத்திரு’ படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

முத்தையா இயக்கத்தில் ‘புலிக்குத்தி பாண்டி’ படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் பிரபு ‘பாயும் ஒளி நீ எனக்கு’, ‘டாணாக்காரன்’., ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்தான், ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. ‘பொன்னியின் செல்வன்’ படமும் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், விக்ரம் பிரபு தற்போது ‘பகையே காத்திரு’ படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இப்படத்தில், விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். இவர், அருண் விஜய்க்கு ஜோடியாக ‘தடம்’ படத்திலும், ஆர்.ஜே பாலாஜியின் ’மூக்குத்தி அம்மன்’ படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு தங்கையாக நடித்திருந்தார். ’மூக்குத்தி அம்மன்’ படத்தில் ஸ்மிருதி வெங்கட்டின் நடிப்பும் காட்சிகளும் பாராட்டுகளை குவித்தது.

இந்நிலையில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இணைந்துள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்படத்தில், வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கிறார். மணிவேல் இயக்க, சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் துவக்க விழா வெள்ளிக்கிழமை (16.04.2021) இன்று காட்டுப்பாக்கத்தில் உள்ள படப்பிடிப்பு பங்களாவில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மே மாதம் இறுதி வரை தொடர்ந்து நடைபெறும்.