கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில் சமூக பிரச்சனையை சொல்லும் படம் ‘மீண்டும்’

0
192

கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில் சமூக பிரச்சனையை சொல்லும் படம் ‘மீண்டும்’

ஹீரோ சினிமாஸ் சார்பில் சி. மணிகண்டன் தயாரித்து கதிரவன், அனேகா, ஷரவணன் சுப்பையா  நடித்துள்ள படம் தான் “மீண்டும்”.

“அஜித்” நடித்து மாபெரும் வெற்றி பெற்ற “சிட்டிசன்” மற்றும் சினேகா நடித்து பரபரப்பாக பேசப்பட்ட ” ஏ.பி.சி.டி.” ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் ஷரவணன் சுப்பையா. இவர் சிறிது இடைவெளிக்கு பிறகு ” மீண்டும் ” படத்தை இயக்கி உள்ளார். இவர் படத்தை பற்றி கூறியதாவது:

“மீண்டும்” ஒரு சமூக பிரச்சனைக்கு வழிதேடும் நாயகனாக கதிரவன் நடித்துள்ளார். இதன் உண்மையை தேடி போகும் ஹீரோவுக்கு குடும்பம், உறவு , வாழ்க்கை என்று வெவ்வேறு கோணங்களில் எதிர்பாராத சிக்கல்கள் உண்டாகிறது. இவைகளிலிருந்து ஹீரோ ‘மீண்டும்’ தன் சகஜநிலைக்கு வந்தாரா இல்லையா? என்பதை காதல், சென்டிமென்ட், ஆக்சன் என்று சரியான விகிதத்தில் கலந்து சொல்லும் படம் தான் ‘மீண்டும்’.

‘மீண்டும்’ திரைப்படம் மார்ச் மாதம் உங்கள் கண்களுக்கு விருந்தாக தியேட்டரில் வெளிவரும்.” என்று சொன்னார்.

PRO
VIJAYMURALEE
GLAMOUR SATHYA