கடின உழைப்பும், அற்பணிப்போடும் போராடி இன்று ‘காலேஜ் ரோடு’ படத்தின் மூலம் கதா நாயகனாகிறார் நடிகர் லிங்கேஷ்

0
172

கடின உழைப்பும், அற்பணிப்போடும் போராடி இன்று ‘காலேஜ் ரோடு’ படத்தின் மூலம் கதா நாயகனாகிறார் நடிகர் லிங்கேஷ்

அன்று தமன்னாவோடு ‘கல்லூரி’ படத்தில் கதா நாயகனாக வாய்ப்பு கிடைத்தும் நடிக்காமல் போனவர். இன்று ” காலேஜ் ரோடு ” படத்தின் மூலம் கதா நாயகனாகிறார் நடிகர் லிங்கேஷ்.

நடிகர் லிங்கேஷ். பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர். இவர் நடித்த கபாலி, பரியேறும் பெருமாள் , படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தாலும். கதா நாயகனாக இப்போதுதான் காலேஜ் ரோடு படத்தில் அறிமுகமாகிறார். காலேஜ் ரோடு திரைப்படம் டிசம்பர் 30 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது .

ஏற்கனவே இந்த திரைப்படத்தை இயக்குனர் ரஞ்சித் அவர்கள் பாராட்டியுள்ளார்.

மாணவர்களின் கல்விக் கடனை பற்றி பேசி இருக்கும் இத்திரைப்படம் மாணவர்கள் மத்தியில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் ஆவலுடன் இருக்கின்றனர் .

ஏறக்குறைய கல்லூரி படத்திற்காக 10 வருடங்களுக்கு முன்னால் எடையை குறைத்து இரண்டு வருடங்கள் திரைப்படத்திற்காக கடினமாக உழைத்த லிங்கேஷ் பின்னர் தொகுப்பாளராக தன் வாழ்க்கையை கடந்து, மெட்ராஸ், கபாலி பரியேறும் பெருமாள், ரஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்தார்.

கடின உழைப்பும், அற்பணிப்போடும் போராடி இன்று கல்லூரியில் படத்தில் கதா நாயகனாக நடிக்காமல் விட்டதை காலேஜ்ரோடு திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.

டிசம்பர் 30 திரையரங்கில் வெளியாகிறது பி வி ஆர் பிச்சர்ஸ் வெளியிடுகின்றனர்.

மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு திரைப்படம் பெரும் என்று ஆவலோடு எதிர்பார்க்கலாம்