ஓவியாவின் காலை சுற்றிய பாம்பு

0
113

ஓவியாவின் காலை சுற்றிய பாம்பு

நடிகை ஓவியாவின் காலை ஒரு பாம்பு சுற்றி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் நடிகை ஓவியா ஹெலனும் ஒருவர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் வெற்றிப் படங்கள் எதையும் கொடுக்கவில்லை என்ற போதும், சமூக வலைதளத்தில் ஓவியா இடும் பதிவுகள் பெரும்பாலும் வைரலாகி விடுகின்றன.

அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், காலில் கொலுசு போன்று போட்டுள்ள டாட்டூவை காட்டியுள்ளார். சுவாரஸ்யமாக காணப்படும் இந்த டாட்டூவில், ஒரு பாம்பு அவரது கணுக்காலில் சுற்றி தன்னைத் தானே விழுங்கிக் கொள்வது போல் அமைந்துள்ளது.

மை லிட்டில் மான்ஸ்டர் என அந்த டாட்டூ வீடியோவை நடிகை ஓவியா பதிவிட்டுள்ளார். ஓவியாவின் காலை பாம்பு சுற்றியது போன்று உள்ள இந்த டாட்டூ வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.