’ஒரு விருது கனவு, இரண்டு ஆசிர்வாதம்’ தேசிய விருது குறித்து தனுஷ் உருக்கம்!

0
201

’ஒரு விருது கனவு, இரண்டு ஆசிர்வாதம்’ தேசிய விருது குறித்து தனுஷ் உருக்கம்!

67-வது தேசிய திரைப்பட விருதுகள் முழுப்பட்டியல் -7 விருதுகளை வென்ற தமிழ்த் திரையுலகம்!

இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2019ஆம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 7 விருதுகளை தமிழ்த்திரையுலகம் வென்றுள்ளது.

தேசிய விருதுகள் முழு விவரம் வருமாறு:

சிறந்த தமிழ்ப்படமாக வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய் மற்றும் தனுஷ் முறையே இந்தி திரைப்படம் ‘போன்ஸ்லே’ மற்றும் தமிழ் திரைப்படமான ‘அசுரன்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகை கங்கனா ரனாவத் ‘மணிகர்னிகா: ஜான்சி ராணி’ மற்றும் ‘பங்கா’ படங்களுக்காக சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது- டி. இமான்

சிறப்பு திரைப்பட விருது: ஓத்தா செருப்பு அளவு 7 (தமிழ்)

ஒத்த செருப்பு திரைப்படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிக்கலவை விருது வழங்கப்பட்டு உள்ளது.

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு கிடைத்து உள்ளது.

சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான விருது இந்தி திரைப்படமான ‘கேசரி’ படத்தின் ‘தேரி மிட்டி’ பாடலுக்காக பி பிராக்கிற்கு செல்கிறது.

சிச்சோர் ‘சிறந்த இந்தி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

மலையாளப்படமான மரக்கார் அரபிகடலிண்டே சிம்ஹம் படம் சிறந்த திரைப்படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட், சிறந்த ஆடை வடைவமைப்பு(சுஜித் மற்றும் சாய்) ஆகிய 3 விருதுகளை பெற்றுள்ளது.

தெலுங்குபடமான மகரிஷி சிறந்த பொழுதுபோக்கு , சிறந்த பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. மேலும் இந்த படத்திற்காக சிறந்த நடன அமைப்பு விருதை ராஜு சுந்தரம் பெற்று உள்ளார்.

சிறந்த அறிமுக படத்திற்கான இந்திரா காந்தி விருது மாதுக்குட்டி சேவியர் இயக்கிய ‘ஹெலன்’ (மலையாளம்) படத்திற்கு செல்கிறது

சிறந்த சண்டைபயிற்சி : அவனே ஸ்ரீமன்னாராயணா (கன்னடம்) படத்திற்காக விக்ரம் மோர்

சிறந்த பாடல்: பிரபா வர்மா கோலாம்பி (மலையாளம்)

சிறந்த பின்னணி இசை: பிரபுதா பானர்ஜி ஜெயேஷ்தோபுட்ரோவுக்கு (பெங்காலி)

சிறந்த ஒப்பனை கலைஞர்: ரஞ்சித் ( ஹெலன் – மலையாளம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ஆனந்தி கோபால் (மராத்தி)

சிறந்த படத்தொகுப்பு : ஜெர்சி (தெலுங்கு)

சிறந்த ஆடியோகிராபி: ஐவ்டு (காசி)

சிறந்த திரைக்கதை (அசல்): ஜெயேஷ்தோபுட்ரோ (பெங்காலி)

சிறந்த திரைக்கதை (தழுவல்): கும்னாமி (பெங்காலி)

சிறந்த திரைக்கதை (வசனம்): தாஷ்கண்ட் பைல்ஸ் (இந்தி)

சிறந்த ஒளிப்பதிவு: கிரிஷ் கங்காதரன் ஜல்லிக்கட்டு படம் (மலையாளம்)

சிறந்த பெண் பின்னணி பாடகர்: சவணி ரவீந்திரா பார்டோ (மராத்தி) படத்திற்கு

சிறந்த இயக்கம்: பஹத்தார் ஹூரைன் (இந்தி) படத்திற்காக சஞ்சய் புரான் சிங் சவுகான்

சிறந்த குழந்தைகள் படம்: கஸ்தூரி (இந்தி)

சுற்றுச்சூழல் குறித்த சிறந்த படம்: நீர் அடக்கம் (மோன்பா)

சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படம்: ஆனந்தி கோபால் (மராத்தி)

தேசிய ஒருங்கிணைப்பு குறித்த சிறந்த படம்: தாஜ்மஹால் (மராத்தி)

கடந்த 2019-ம் ஆண்டுக்கான தேசிய விருது பெறுபவர்களின் விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் அசுரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படம் எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்டிருந்தது.

தேசிய விருது அறிவிப்பு வெளியானதும் சமூக வலைதளங்களில் தனுஷின் ரசிகர்கள் அதனை திருவிழா போல கொண்டாடினார்கள். இந்நிலையில் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ள தனுஷ், சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

“அனைவருக்கும் வணக்கம், அசுரனுக்கு மதிப்புமிக்க தேசிய விருது வழங்கப்பட்டது என்ற அற்புதமான செய்தியைக் கேட்டு நான் எழுந்தேன். சிறந்த நடிகருக்கான விருதை வெல்வது ஒரு கனவு, இரண்டை வெல்வது ஆசீர்வாதத்திற்கு குறைவில்லாதது. நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைத்ததில்லை.

நன்றி சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள், ஆனால் ஒரு சிலரைக் குறிப்பிடுகிறேன். எப்போதும் போல நான் முதலில் என் தாய் மற்றும் தந்தைக்கு நன்றி கூறுகிறேன், என் குரு என் சகோதரர்.

‘சிவசாமி’யை எனக்குக் கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி.

வெற்றி, பாலு மகேந்திரா சாரின் அலுவலகத்தில் நான் உங்களைச் சந்தித்தபோது நீங்கள் ஒரு நண்பராகவும், தோழராகவும் மற்றும் சகோதரராகவும் மாறுவீர்கள் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நாம் ஒன்றாக பணியாற்றிய நான்கு படங்கள், ஒன்றாக தயாரித்த இரண்டு படங்கள் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் என்னை மிகவும் நம்பியதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்ததாக எனக்கு நீங்கள் எழுதியதைக் கேட்க காத்திருக்க முடியவில்லை. பெரிய அணைப்பு.

இந்த விருதுக்கு நான் தேசிய விருது ஜூரிக்கு மனமார்ந்த நன்றி கூறுகிறேன்.

மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தட்டிச்சென்றுள்ளார் . இன்று வெற்றிமாறனை தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் . தேசிய விருது என்பது பெரிய ஊக்கம் என வெற்றிமாறன் கூறியுள்ளார் .

எனது தயாரிப்பாளர் தாணு சாரின் அனைத்து ஆதரவிற்கும் நன்றி.

முழு அசுரன் குழுவினருக்கும், குறிப்பாக எனது குடும்பத்தினர் அன்பான பச்சையம்மா மஞ்சு, எனது சிதம்பரம் கென், மற்றும் எனது முருகன் டீஜே ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன்.

‘வா அசுரா’ பாடலை தந்த ஜி.வி-க்கு நன்றி.

அனைத்து ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சி சேனல்களுக்கும், சமூக ஊடகங்களின் ஆதரவுக்கும், அன்பிற்கும் எனது மனமார்ந்த நன்றி.

எனக்கு வாழ்த்து சொல்ல நேரம் ஒதுக்கிய எனது திரையுலக நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் நன்றி.

இறுதியாக எனது ரசிகர்களுக்கு… எனது பலத்தின் தூண்களுக்கு நன்றி கூறுகிறேன்… நீங்கள் அனைவரும் எனக்குக் கொடுக்கும் நிபந்தனையற்ற அன்புதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. போதுமான நன்றி சொல்ல முடியாது. நான் உங்கள் அனைவரையும் நிலவுக்கு பிறகும் நேசிக்கிறேன். தயவுசெய்து அன்பைப் பரப்புங்கள், வேறு எதுவும் இல்லை” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் தனுஷ்.