ஒரு பூங்கொத்து.. ஒரு நினைவுப்பரிசு.. தெலங்கனா முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு!

0
113

ஒரு பூங்கொத்து.. ஒரு நினைவுப்பரிசு.. தெலங்கனா முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு!

தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவை சந்தித்துப் பேசினார் நடிகர் விஜய்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் ‘விஜய் 66’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கின் முன்னணி இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கிய ‘விஜய் 66’ படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ்வை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். சந்திரசேகர் ராவுக்கு விஜய் மலர்கொத்தும் பதிலுக்கு சந்திரசேகர் ராவ் நினைவுப்பரிசும் வழங்கி கெளரவித்துக்கொண்டனர். இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

குடும்பக் கதையாக உருவாகி வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஷாம் மற்றும் நடிகர் சரத்குமார், பிரபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023 ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ‘விஜய் 66’ படத்தை வெளியிடவுள்ளது படக்குழு.