ஒத்த செருப்பு-size 7 ஹிந்தி படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம்… ரசிகர்களிடம் பார்த்திபன் கேள்வி

0
281

ஒத்த செருப்பு-size 7 ஹிந்தி படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம்… ரசிகர்களிடம் பார்த்திபன் கேள்வி

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள். இந்த படத்தை திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டினர். மேலும் இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன.

சமீபத்தில் ஒத்த செருப்பு படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பார்த்திபன் அறிவித்தார். ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீமேக்கில் நவாசுதீன் சித்திக் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்…’ என்று நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பல கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.