ஒடிடியில் வெளியாகும் ‘கர்ணன்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
237

ஒடிடியில் வெளியாகும் ‘கர்ணன்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கலைப்புலி S.தாணு தயாரிப்பில் திரையரங்குகளில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியானது கர்ணன் திரைப்படம். சந்தேஷ் நாராயணனின் உயிரோட்டமான இசையும், தனுஷின் பக்குவமான நடிப்பும், மாரி செல்வராஜின் அற்புதமான திரைக் கதையும், தேனி ஈஸ்வரின் அழகியலும், வாழ்வியலும் கொண்ட ஒளிப்பதிவும் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை உண்டு செய்தது. இத்திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வரவேற்பை பெற்றது.

கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக நேற்று முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் கர்ணன் திரைப்டத்தை தியேட்டரில் பார்க்க முடியாத ரசிகர்கள் கவலையடைந்தனர். இந்நிலையில் கர்ணன் திரைப்படம் ஒடிடி தளமான அமேசான் பிரைமில் மே 9 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு திரைப்படம் 30 நாள்கள் தியேட்டரில் வெளியான பின்பு ஒடிடியில் வெளிடலாம் என்ற விதிமுறையை பின்பற்றி மே 9 ஆம் தேதி அமேசானில் வருகிறான் கர்ணன்.

இந்நிலையில், கர்ணன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். ‘கர்ணன்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை அதன் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ S.தாணுவிடம் இருந்து வாங்கி இருக்கிறார், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ். மேலும் இவரது மகனான பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், தான் தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது முடிவாகவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், இதுவரை 8 படங்களில் நடித்துள்ளார். அதில் ‘சுந்தரபாண்டியன்’, ‘ராட்சசன்’ போன்ற தமிழ் படங்களின் ரீமேக்கும் அடங்கும்.